• Apr 14 2026

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக ஆடை தொழிலகம் திறந்துவைப்பு!

Ziya / Apr 13th 2026, 3:27 pm
image

யுவதிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கில் இன்றைய தினம் jaffna garment திறந்து வைக்கப்பட்டுள்ளது.


திறப்பு விழா நிகழ்வு அல்வாய் வதிரி பாக்கியலடசுமி பவனத்தில் jaffna garment செயலாளர் திரவியசிங்கம் வரதராசன் தலைமையில் இடம்பெற்றது. 


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.


வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, jaffna garment தொழிலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். 


இதில் வாழ்த்துரைகளை  ஆச்சுவேலி மக்கள் வங்கி முகமையாளர் ச.சர்வானந்தன், வவுனியா பல்கலைக்கழக முயற்சியாண்மை கற்கை நெறி ஆலோசகர் ப.சசிதரன், வட மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் பா.முகுந்தன், வடமாகாண உடற்கல்வி  உதவிப் பணிப்பாளர் இ.இராஜசீலன், seylan வங்கி நெல்லியடி கிளை முகமையாளர் சூ.கோகுலசங்கர், நெல்லியடி  சம்பத் வங்கி முகாமையாளர் கோ. ஜனனன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.


இந் நிகழ்வில் அரசியல் செயற்ப்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், மத தலைவர்கள், பிரதேச மக்கள், வாங்கிகளின் அதிகாரிகள், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக ஆடை தொழிலகம் திறந்துவைப்பு யுவதிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கில் இன்றைய தினம் jaffna garment திறந்து வைக்கப்பட்டுள்ளது.திறப்பு விழா நிகழ்வு அல்வாய் வதிரி பாக்கியலடசுமி பவனத்தில் jaffna garment செயலாளர் திரவியசிங்கம் வரதராசன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, jaffna garment தொழிலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். இதில் வாழ்த்துரைகளை  ஆச்சுவேலி மக்கள் வங்கி முகமையாளர் ச.சர்வானந்தன், வவுனியா பல்கலைக்கழக முயற்சியாண்மை கற்கை நெறி ஆலோசகர் ப.சசிதரன், வட மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் பா.முகுந்தன், வடமாகாண உடற்கல்வி  உதவிப் பணிப்பாளர் இ.இராஜசீலன், seylan வங்கி நெல்லியடி கிளை முகமையாளர் சூ.கோகுலசங்கர், நெல்லியடி  சம்பத் வங்கி முகாமையாளர் கோ. ஜனனன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.இந் நிகழ்வில் அரசியல் செயற்ப்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், மத தலைவர்கள், பிரதேச மக்கள், வாங்கிகளின் அதிகாரிகள், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement