• Jul 22 2025

வாக்களிக்க தவறுபவர்களுக்கு இனி அபராதம்! தேர்தல் ஆணைக்குழு அதிரடி

Chithra / Jul 21st 2025, 9:08 am
image

 

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேர்தல்களில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு கட்டாயமாக்கப்படும், வாக்களிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவாகும் பெரும் நிதியை கருத்தில் கொண்டு, தேர்தல்களில் அதிகபட்ச பலனை பெறும் நோக்குடன் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு மனுத்தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகையை உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் எதிர்கால தேர்தல்களுக்காக புதிய சட்டங்களை உருவாக்குவது மிக அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளதால் அவை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிக்க தவறுபவர்களுக்கு இனி அபராதம் தேர்தல் ஆணைக்குழு அதிரடி  எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.எதிர்கால தேர்தல்களில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு கட்டாயமாக்கப்படும், வாக்களிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவாகும் பெரும் நிதியை கருத்தில் கொண்டு, தேர்தல்களில் அதிகபட்ச பலனை பெறும் நோக்குடன் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மேலும், எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு மனுத்தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகையை உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்தார்.நாட்டில் எதிர்கால தேர்தல்களுக்காக புதிய சட்டங்களை உருவாக்குவது மிக அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளதால் அவை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement