• May 23 2026

பாடசாலை மைதானத்தில் சுற்றித்திரியும் நரிகள்; அச்சத்தில் மாணவர்கள்!

shanu / Oct 3rd 2025, 3:10 pm
image

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். 

 

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் நரிகள், காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து ஊளையிடுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

 

தற்போதைய சூழ்நிலை காரணமாக, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

 

பாடசாலையில் சுற்றித் திரியும் நரிகளை பிடித்து வேறு பொருத்தமான இடத்திற்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் சுற்றித்திரியும் நரிகள்; அச்சத்தில் மாணவர்கள் ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.  விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் நரிகள், காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து ஊளையிடுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போதைய சூழ்நிலை காரணமாக, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  பாடசாலையில் சுற்றித் திரியும் நரிகளை பிடித்து வேறு பொருத்தமான இடத்திற்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement