• May 27 2026

மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர்; யாழில் பலியான சிறுமி!

Chithra / Sep 29th 2025, 9:10 am
image


யாழ்ப்பாணம் - கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

தென்மராட்சி - மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர்; யாழில் பலியான சிறுமி யாழ்ப்பாணம் - கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென்மராட்சி - மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement