• Jun 16 2026

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு அடிக்கல் நடுகை!

shanu / Jun 16th 2026, 11:44 am
image

மூதூர்,  ஷாபி நகரில் தித்வா புயலினால்  பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவருக்கான 6 மில்லியன் ரூபா செலவில் வீடு நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(16)இடம் பெற்றது.


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தனசேகர, பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை  நட்டு வைத்தார்.


மூதூர், சேருவில மற்றும் வெருகல்  ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வீடும் ஆறு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. 


இந்த நிலையில் தற்போது மொத்தம்  நான்கு வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டு நிர்மான பணிகளுக்காக முழுமையான அனுசரணையை டோக்கியோ சீமன்து  நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது 


கிழக்கு மாாண தேசிய வீடமைப்பு அதிகார சபை, தவிசாளார்  என். சுகுமாரன், டோக்கியோ சீமெந்து கம்பனியின் பொறியியலாளர் எஸ். கஜேந்திரன், கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ். துவாரகன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் பி. ராஜசேகர், கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி நதுன் திலீப் , தேசிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் கே. சப்ரான் , தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பாத்திமா அப்ரின், கிளீன்  சிறிலங்கா வேலை திட்டத்தின் மூதூர் பிரதேச இணைப்பாளர் வி. எம். ரம்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் உரையாற்றுகையில், நானும் இயற்கை அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட ஒருவன், நான் கந்தளாய்  பிரதேசத்தில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்தபோது கந்தளாய்  குளம் உடைபடுத்து அதன் காரணமாக எனது வீடும் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்போது எந்த நிவாரணமும் நஷ்ட ஈடுகலோ எங்களுக்கு வழங்கப்படவில்லை.  


ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசாங்கம் இருக்கும்போது தித்வா  புயல் வந்ததன் காரணம் ஒரு வருஷம் கூட ஆகவில்லை அதற்கு இடையில் சகல பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈடுகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன். 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எல்லோரும் ஒன்றுதான். தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற இன மத பாகுபாடு இருக்க மாற்றாது. முன்னைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு சார்பானவர்கள் எவரோ அவர்களுக்கு தான் வேலைகள் அனைத்தும் நடந்திருக்கின்றன.


அரசாங்கத்தின் அபிவிருத்தியை முறையாக செய்வதற்கு மக்களினுடைய உதவி அவசியமானது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி சகல நிதியை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது அந்த வகையில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. 


 எமது அரசாங்கத்தில் லஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரயம் இவை அனைத்தும் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளன அந்த வகையிலே அபிவிருத்திக்கான தாராளமான நிதி தற்போது கையிருப்பில் உள்ளது. இது மக்களுடைய பணம் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும் இதுவே அரசாங்கத்தினுடைய கொள்கையாகும் என்று தெரிவித்தார்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு அடிக்கல் நடுகை மூதூர்,  ஷாபி நகரில் தித்வா புயலினால்  பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவருக்கான 6 மில்லியன் ரூபா செலவில் வீடு நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(16)இடம் பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தனசேகர, பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை  நட்டு வைத்தார்.மூதூர், சேருவில மற்றும் வெருகல்  ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வீடும் ஆறு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது மொத்தம்  நான்கு வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டு நிர்மான பணிகளுக்காக முழுமையான அனுசரணையை டோக்கியோ சீமன்து  நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது கிழக்கு மாாண தேசிய வீடமைப்பு அதிகார சபை, தவிசாளார்  என். சுகுமாரன், டோக்கியோ சீமெந்து கம்பனியின் பொறியியலாளர் எஸ். கஜேந்திரன், கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ். துவாரகன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் பி. ராஜசேகர், கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி நதுன் திலீப் , தேசிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் கே. சப்ரான் , தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பாத்திமா அப்ரின், கிளீன்  சிறிலங்கா வேலை திட்டத்தின் மூதூர் பிரதேச இணைப்பாளர் வி. எம். ரம்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் உரையாற்றுகையில், நானும் இயற்கை அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட ஒருவன், நான் கந்தளாய்  பிரதேசத்தில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்தபோது கந்தளாய்  குளம் உடைபடுத்து அதன் காரணமாக எனது வீடும் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்போது எந்த நிவாரணமும் நஷ்ட ஈடுகலோ எங்களுக்கு வழங்கப்படவில்லை.  ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசாங்கம் இருக்கும்போது தித்வா  புயல் வந்ததன் காரணம் ஒரு வருஷம் கூட ஆகவில்லை அதற்கு இடையில் சகல பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈடுகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எல்லோரும் ஒன்றுதான். தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற இன மத பாகுபாடு இருக்க மாற்றாது. முன்னைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு சார்பானவர்கள் எவரோ அவர்களுக்கு தான் வேலைகள் அனைத்தும் நடந்திருக்கின்றன.அரசாங்கத்தின் அபிவிருத்தியை முறையாக செய்வதற்கு மக்களினுடைய உதவி அவசியமானது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி சகல நிதியை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது அந்த வகையில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.  எமது அரசாங்கத்தில் லஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரயம் இவை அனைத்தும் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளன அந்த வகையிலே அபிவிருத்திக்கான தாராளமான நிதி தற்போது கையிருப்பில் உள்ளது. இது மக்களுடைய பணம் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும் இதுவே அரசாங்கத்தினுடைய கொள்கையாகும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement