மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றியை கண்டுள்ளது.
பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனின் தூர நோக்கான சிந்தனையூடாகவே இந்த இயற்கை உர உற்பத்தியானது கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு திறம்பட நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த வேலைத்திட்டமானது தற்போது வெற்றியை கண்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு விவசாய செயற்பாட்டிற்கு 3 இலட்சம் கிலோ இயற்கை உரமானது தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மானிப்பாய் பிரதேச சபை முன்வந்துள்ளது.
அதன் முதற்கட்டமாக தற்போது 50ஆயிரம் கிலோ எடையுடைய உரத்தினை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் முயற்சி - இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றியை கண்டுள்ளது. பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது.மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனின் தூர நோக்கான சிந்தனையூடாகவே இந்த இயற்கை உர உற்பத்தியானது கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு திறம்பட நடைபெற்று வந்தது.இந்நிலையில் அந்த வேலைத்திட்டமானது தற்போது வெற்றியை கண்டுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு விவசாய செயற்பாட்டிற்கு 3 இலட்சம் கிலோ இயற்கை உரமானது தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மானிப்பாய் பிரதேச சபை முன்வந்துள்ளது.அதன் முதற்கட்டமாக தற்போது 50ஆயிரம் கிலோ எடையுடைய உரத்தினை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.