• Apr 14 2026

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது

Chithra / Mar 9th 2026, 2:43 pm
image

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (09) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.


வாக்குமூலம் வழங்க வந்திருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.


சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (09) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.வாக்குமூலம் வழங்க வந்திருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement