• May 14 2025

வெளிநாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது: வெளியான காரணம்..!

Sharmi / May 13th 2025, 8:41 am
image

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் நேற்று(12) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(BIA) அதிக அளவு சட்டவிரோத போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் சிறப்பு சோதனையின் போது, குறித்த பிரஜையின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ எடையுள்ள "குஷ்" போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இளம் பெண், வந்த பிறகு சுங்கப் பகுதியை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். 

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கின் தெரு மதிப்பு சுமார் 460 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரும் போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.


வெளிநாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது: வெளியான காரணம். தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் நேற்று(12) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(BIA) அதிக அளவு சட்டவிரோத போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் சிறப்பு சோதனையின் போது, குறித்த பிரஜையின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ எடையுள்ள "குஷ்" போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.சந்தேக நபரான இளம் பெண், வந்த பிறகு சுங்கப் பகுதியை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட சரக்கின் தெரு மதிப்பு சுமார் 460 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.சந்தேக நபரும் போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement