மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (22 ) இரவு தீ்பபரவல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ பரவலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை காட்டில் தீப்பரவல்; கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் பிரிவினர் மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று திங்கட்கிழமை (22 ) இரவு தீ்பபரவல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரகல பகுதியிலுள்ள காட்டில் தீப் பரவல் ஏற்பட்டதாக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தீ பரவலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.