• Sep 23 2025

வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி போதையில் கைது

Chithra / Sep 23rd 2025, 10:51 am
image

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில், வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி  நேற்று மாலை (22) போதையில் இருந்ததால் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கந்தளாய் பொலிசார் வாகனத்தை  சோதனை செய்தனர். அப்போது, சாரதி மது அருந்தியிருந்தது தெரியவந்தள்ளது .

மேலும் சாரதியிடம் வாகன அனுமதிபத்திரம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பொலிசார் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர், திருகோணமலை, கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .

மேலும் வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக கந்தளாய் பொலிசார்  மாற்று சாரதி  ஒருவரை ஏற்பாடு செய்து, அவர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிசார்  தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி போதையில் கைது கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில், வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி  நேற்று மாலை (22) போதையில் இருந்ததால் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கந்தளாய் பொலிசார் வாகனத்தை  சோதனை செய்தனர். அப்போது, சாரதி மது அருந்தியிருந்தது தெரியவந்தள்ளது .மேலும் சாரதியிடம் வாகன அனுமதிபத்திரம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பொலிசார் உடனடியாகக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர், திருகோணமலை, கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .மேலும் வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக கந்தளாய் பொலிசார்  மாற்று சாரதி  ஒருவரை ஏற்பாடு செய்து, அவர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.கைது செய்யப்பட்ட சாரதி கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement