• Jul 16 2026

கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி: அடிக்கல் நாட்டினார் பிரதி சபாநாயகர்

Chithra / Jul 15th 2026, 5:02 pm
image


கொழும்பு 14, நவகம்புர பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முதற்கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்வும்  இன்றைய தினம் (15) மிகச் சிறப்பாக நடைபெற்றது.


 தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் இந்த புதிய வீட்டிற்கான அடிக்கல்லை, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாட்டி வைத்தார்.


நாடளாவிய ரீதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் விசேட எண்ணக்கருவுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், மிகவும் வறிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் உழைப்பையும் இணைத்து நிலையான மற்றும் அழகான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. 


இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் இலங்கை முழுவதும் சுமார் 10,000 வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.


கொழும்பு நகர எல்லையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதில் உள்ள நிலப் பற்றாக்குறை மற்றும் ஏனைய திணைக்களங்களின் அனுமதி போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் 6-வது வீடு இதுவாகும். 


நவகம்புர வட்டாரத்தைச் சேர்ந்த வேலுராணி என்ற பயனாளிக்கே இப்புதிய வீடு அமையவுள்ளதுடன், இதற்கான முழுமையான பரிந்துரையை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார்.


தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், நவகம்புர வட்டார இளைஞர் மற்றும் மகளிர் அணித் தலைவிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கொழும்பில் வசிப்பவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல என்றும், இங்கு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 


இத்தகைய நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியானது பயனாளியின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டதுடன், புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து பயனாளி தனது குடும்பத்துடன் குடியேற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி: அடிக்கல் நாட்டினார் பிரதி சபாநாயகர் கொழும்பு 14, நவகம்புர பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முதற்கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்வும்  இன்றைய தினம் (15) மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் இந்த புதிய வீட்டிற்கான அடிக்கல்லை, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாட்டி வைத்தார்.நாடளாவிய ரீதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் விசேட எண்ணக்கருவுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், மிகவும் வறிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் உழைப்பையும் இணைத்து நிலையான மற்றும் அழகான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் இலங்கை முழுவதும் சுமார் 10,000 வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.கொழும்பு நகர எல்லையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதில் உள்ள நிலப் பற்றாக்குறை மற்றும் ஏனைய திணைக்களங்களின் அனுமதி போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் 6-வது வீடு இதுவாகும். நவகம்புர வட்டாரத்தைச் சேர்ந்த வேலுராணி என்ற பயனாளிக்கே இப்புதிய வீடு அமையவுள்ளதுடன், இதற்கான முழுமையான பரிந்துரையை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், நவகம்புர வட்டார இளைஞர் மற்றும் மகளிர் அணித் தலைவிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கொழும்பில் வசிப்பவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல என்றும், இங்கு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியானது பயனாளியின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டதுடன், புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து பயனாளி தனது குடும்பத்துடன் குடியேற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement