• Apr 16 2026

வவுனியா, மன்னாரில் தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு!

shanu / Mar 31st 2026, 1:24 pm
image

தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் வவுனியா , மன்னார் பகுதிகளில்  இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அவரது நினைவுத்தூபியில் இடம்பெற்றது. 


தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 


இதன்போது அவர் தொடர்பான நினைவுரைகளும் ஆற்றப்பட்டிருந்தது.


நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



வவுனியா, மன்னாரில் தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் வவுனியா , மன்னார் பகுதிகளில்  இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அவரது நினைவுத்தூபியில் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அவர் தொடர்பான நினைவுரைகளும் ஆற்றப்பட்டிருந்தது.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement