• Jun 07 2025

குடிநீர் போத்தலுக்கு அதிக வசூல் - வர்த்தக நிலையத்துக்கு அபராதம்...!

shanuja / Jun 7th 2025, 1:50 pm
image

குடிநீர் போத்தலுக்கு  10 ரூபா அதிகமாக வசூலித்ததற்காக  வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலை 80 ரூபாவுக்கு விற்றுள்ளார்.  


500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா. ஆனால் சில்லறை விலையை  விட  10 ரூபா அதிகமாக குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டது. 


அதனையடுத்தே குறித்த வர்த்தக நிலையத்துக்கு கலவானை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 


வழக்கின் விசாரணையில் வர்த்தக நிலையம்  குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 



இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து புகாரளிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கை முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

குடிநீர் போத்தலுக்கு அதிக வசூல் - வர்த்தக நிலையத்துக்கு அபராதம். குடிநீர் போத்தலுக்கு  10 ரூபா அதிகமாக வசூலித்ததற்காக  வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலை 80 ரூபாவுக்கு விற்றுள்ளார்.  500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா. ஆனால் சில்லறை விலையை  விட  10 ரூபா அதிகமாக குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டது. அதனையடுத்தே குறித்த வர்த்தக நிலையத்துக்கு கலவானை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் வர்த்தக நிலையம்  குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து புகாரளிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கை முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement