• Dec 09 2024

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக தொடரும் அகழ்வு பணி!

Chithra / Oct 10th 2024, 12:36 pm
image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து  அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது.

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்றுமுன்தினம் மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பின்னர் நேற்றையதினம் வரை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம்  காலை மீளவும் தண்ணீர்  அகற்றும் பணி இடம்பெற்று  மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகிறது.


விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக தொடரும் அகழ்வு பணி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து  அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது.கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்றுமுன்தினம் மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்றையதினம் வரை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம்  காலை மீளவும் தண்ணீர்  அகற்றும் பணி இடம்பெற்று  மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement