ரஷ்யாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து சர்வதேச அரசியல் விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையிலான கடுமையான மோதல், அமைதித் தீர்வை எட்டுவதை மேலும் சிக்கலாக்குவதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திய நிலையில், ரஷ்யா 60 நாட்கள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உரியது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், தேர்தல் விவகாரம் அமெரிக்கா–உக்ரைன் உறவில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டும் செலென்ஸ்கி, அதற்குப் பதிலடியாக ரஷ்ய எண்ணெய் நிலையங்களைக் குறிவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்–செலென்ஸ்கி இடையே தீவிரமடையும் மோதல் ரஷ்யாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து சர்வதேச அரசியல் விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையிலான கடுமையான மோதல், அமைதித் தீர்வை எட்டுவதை மேலும் சிக்கலாக்குவதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.உக்ரைனில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திய நிலையில், ரஷ்யா 60 நாட்கள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைனின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உரியது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், தேர்தல் விவகாரம் அமெரிக்கா–உக்ரைன் உறவில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டும் செலென்ஸ்கி, அதற்குப் பதிலடியாக ரஷ்ய எண்ணெய் நிலையங்களைக் குறிவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.