விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த வீரர்கள் அவமதிக்கப்படும் நிலையில், வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது முற்றிலும் தவறான முன்னுதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், அவரது விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் அல்லது அந்த அமைப்பை ஊக்குவிக்கும் மற்றும் நினைவுபடுத்தும் செயற்பாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஈடுபட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான திலீபனின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த வீரர்கள் அவமதிக்கப்படும் நிலையில், வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் கௌரவிக்கப்படுவதாகவும் சானக மாதுகொட குற்றம் சாட்டினார்.
மேலும், திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டதாகவும், இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகள் திட்டமிட்ட வகையில் விதைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புலிகளுக்குச் சிலை வைப்பது வீரர்களை அவமதிக்கும் செயல் மொட்டு எம்.பி. கடும் எதிர்ப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த வீரர்கள் அவமதிக்கப்படும் நிலையில், வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது முற்றிலும் தவறான முன்னுதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், அவரது விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் அல்லது அந்த அமைப்பை ஊக்குவிக்கும் மற்றும் நினைவுபடுத்தும் செயற்பாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஈடுபட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலையில், நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான திலீபனின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த வீரர்கள் அவமதிக்கப்படும் நிலையில், வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் கௌரவிக்கப்படுவதாகவும் சானக மாதுகொட குற்றம் சாட்டினார்.மேலும், திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டதாகவும், இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகள் திட்டமிட்ட வகையில் விதைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.