• Mar 08 2026

5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து

dorin / Feb 14th 2026, 7:20 pm
image

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அதற்கமைய 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதற்கமைய 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement