வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று (01) முதல் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கடந்த ஜூன் 7 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறைக்கு அமைய, சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், மாலைத்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய 13 நாடுகளில் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, பணியகப் பதிவைப் பெறுவதற்கு அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில், மனித கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு பாதுகாப்பாக அனுப்பும் நோக்கில் பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு ஒப்பந்த சான்றிதழ் திட்டம் இன்று முதல் அமுல் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று (01) முதல் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த ஜூன் 7 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. புதிய நடைமுறைக்கு அமைய, சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், மாலைத்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய 13 நாடுகளில் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, பணியகப் பதிவைப் பெறுவதற்கு அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில், மனித கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு பாதுகாப்பாக அனுப்பும் நோக்கில் பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.