• May 06 2026

மின்சாரக் கட்டண திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்

Chithra / May 6th 2026, 8:32 am
image

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த பொதுமக்களின் 

வாய்மொழி மூலமான கருத்துக்கேட்பு இன்று நடைபெறும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வு இன்று முற்பகல் 08:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை.கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இடம்பெறும்

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆவது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29(10) பிரிவின் கீழ் இந்தப் பொது விசாரணை சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய அமைப்பு இயக்குனரால் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக (Q2 & Q3) இந்த விசேட மின்சாரக் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. 

இது தொடர்பான பொதுமக்களின் நிலைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது குறித்த மேலதிக கருத்துக்களை முன்வைக்க ஆர்வமுள்ள தரப்பினர் இந்த அமர்வில் கலந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மின்சாரக் கட்டண திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம் 2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த பொதுமக்களின் வாய்மொழி மூலமான கருத்துக்கேட்பு இன்று நடைபெறும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.இந்தக் கலந்தாய்வு இன்று முற்பகல் 08:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை.கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இடம்பெறும்2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆவது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29(10) பிரிவின் கீழ் இந்தப் பொது விசாரணை சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுகிறது.தேசிய அமைப்பு இயக்குனரால் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக (Q2 & Q3) இந்த விசேட மின்சாரக் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்களின் நிலைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது குறித்த மேலதிக கருத்துக்களை முன்வைக்க ஆர்வமுள்ள தரப்பினர் இந்த அமர்வில் கலந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement