• May 03 2026

மின்சார மோசடி- நஷ்ட ஈடு அறவீடு!

Ziya / Feb 3rd 2026, 2:01 pm
image

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா நஷ்டஈடு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, 2,527,500 ரூபா நீதிமன்ற அபராதங்களாக விதிக்கப்பட்டுள்ளது.


விசாரணையில் 1,259 சம்பவங்களில் மின்சார மீட்டர் மாற்றங்கள், 72 சம்பவங்களில் சட்டவிரோதமான கோக்கி (bypass) பயன்படுத்தல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.


இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 


இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாக இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் இந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். 


அத்துடன், பொதுமக்கள் மின்சார மோசடி தொடர்பான எந்த தகவலும் இருந்தால் 011-2422259 அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார மோசடி- நஷ்ட ஈடு அறவீடு இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா நஷ்டஈடு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, 2,527,500 ரூபா நீதிமன்ற அபராதங்களாக விதிக்கப்பட்டுள்ளது.விசாரணையில் 1,259 சம்பவங்களில் மின்சார மீட்டர் மாற்றங்கள், 72 சம்பவங்களில் சட்டவிரோதமான கோக்கி (bypass) பயன்படுத்தல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாக இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் இந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன், பொதுமக்கள் மின்சார மோசடி தொடர்பான எந்த தகவலும் இருந்தால் 011-2422259 அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement