• Apr 15 2026

சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற முதியவர் மரணம்

Chithra / Feb 22nd 2026, 4:34 pm
image


சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 81 வயதுடைய ஆண் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனத்தால் மரணமடைந்துள்ளார். 

இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இன்று காலை சிவனடிபாதமலைக்கு அவரது குடும்பத்தினருடன் செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடலம்  கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணித்தவரது உடற்கூற்று பரிசோதனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற பின்னர் அவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கூறினார்.


சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற முதியவர் மரணம் சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 81 வயதுடைய ஆண் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனத்தால் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இன்று காலை சிவனடிபாதமலைக்கு அவரது குடும்பத்தினருடன் செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலம்  கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மரணித்தவரது உடற்கூற்று பரிசோதனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற பின்னர் அவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement