• Apr 27 2026

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

Chithra / Feb 24th 2026, 11:02 am
image


மொனராகலை, எத்திமலை - கெம்பிலித்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


எத்திமலை - ஹந்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், நேற்று திங்கட்கிழமை இரவு கெம்பிலித்த பகுதியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதன்போது, அங்கு வந்த காட்டு யானை அவரைத் திடீரெனத் தாக்கியுள்ளது.


இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது எத்திமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு மொனராகலை, எத்திமலை - கெம்பிலித்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,எத்திமலை - ஹந்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், நேற்று திங்கட்கிழமை இரவு கெம்பிலித்த பகுதியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதன்போது, அங்கு வந்த காட்டு யானை அவரைத் திடீரெனத் தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது எத்திமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement