• Apr 17 2026

கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

Aathira / Mar 21st 2026, 9:58 am
image

புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயலில் பெருநாள் தொழுகை இன்று காலை 6.15 மணிக்கு மிக விசேடமாக இடம்பெற்றது.

பள்ளிவாயலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி அவர்கள் பெருநாள் தொழுகையை நடாத்தியதுடன், நோன்புப் பெருநாளின் சிறப்புகளை உள்ளடக்கிய குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

இதன்போது, நாட்டின் நிரந்தர சமாதானமும், நிலையான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமென இறைவனிடம் விசேட துவா பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பெருநாள் தொழுகையில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தொழுகையைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த மக்கள் ஒருவருக்கொருவர் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயலில் பெருநாள் தொழுகை இன்று காலை 6.15 மணிக்கு மிக விசேடமாக இடம்பெற்றது.பள்ளிவாயலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி அவர்கள் பெருநாள் தொழுகையை நடாத்தியதுடன், நோன்புப் பெருநாளின் சிறப்புகளை உள்ளடக்கிய குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.இதன்போது, நாட்டின் நிரந்தர சமாதானமும், நிலையான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமென இறைவனிடம் விசேட துவா பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.இப் பெருநாள் தொழுகையில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தொழுகையைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த மக்கள் ஒருவருக்கொருவர் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement