மாத்தறையில் திக்வெல்ல பொலிஸ் பிரிவின் அளுத்பர சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் திக்வெல்ல, குருந்துஹேன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் இரண்டு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருவரில் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில்,
சந்தேக நபரை கைது செய்ய திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களின் மது விருந்தில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் படுகொலை மாத்தறையில் திக்வெல்ல பொலிஸ் பிரிவின் அளுத்பர சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் திக்வெல்ல, குருந்துஹேன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இவர் இரண்டு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருவரில் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேக நபரை கைது செய்ய திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.