கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஜந்து பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் போதை மாத்திரைகள்; கொழும்பிலிருந்து கடத்தி வந்த மூவர் யாழில் கைது கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஜந்து பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.