இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரத்தை பரஸ்பரமாக
அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் இத்தாலி குடியரசுக்கும் இடையிலான சாரதி
அனுமதிப்பத்திரத்தை பரஸ்பரமாக அங்கீகரித்தல் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது.
அவ் ஒப்பந்தத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி தொழிநுட்ப ரீதியான
திருத்தங்களை உட்சேர்த்து மீண்டும் வலுவாக்கம் செய்வதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது.
06 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் இத்தாலியில் வசிக்கின்ற மற்றும் இத்தாலி வதிவிடத்தைப்
பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இலங்கையில் பெற்றுக்கொண்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை
பரிமாற்றி இத்தாலி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இலங்கையில் வசிக்கின்ற இத்தாலியர்களுக்கு அவர்களுடைய செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமாக வலுவாக்கம் செய்வதற்கான பொறிமுறையை நிறுவுதல் போன்றன குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பர ரீதியாக அங்கீகரிப்பதற்கு இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்தாலி - இலங்கை இடையிலான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரத்தை பரஸ்பரமாகஅங்கீகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் இத்தாலி குடியரசுக்கும் இடையிலான சாரதிஅனுமதிப்பத்திரத்தை பரஸ்பரமாக அங்கீகரித்தல் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது. அவ் ஒப்பந்தத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி தொழிநுட்ப ரீதியானதிருத்தங்களை உட்சேர்த்து மீண்டும் வலுவாக்கம் செய்வதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது.06 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் இத்தாலியில் வசிக்கின்ற மற்றும் இத்தாலி வதிவிடத்தைப்பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இலங்கையில் பெற்றுக்கொண்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைபரிமாற்றி இத்தாலி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இலங்கையில் வசிக்கின்ற இத்தாலியர்களுக்கு அவர்களுடைய செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமாக வலுவாக்கம் செய்வதற்கான பொறிமுறையை நிறுவுதல் போன்றன குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பர ரீதியாக அங்கீகரிப்பதற்கு இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.