ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானியா, தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) நகரை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணைகளை மூலத்திலேயே அழிக்கும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தயார் என பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் தளம் மீதே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சைப்ரஸில் உள்ள பிரித்தானிய வானூர்தி தளம் மீது ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் குறைந்த அளவிலான சேதம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைப்பிரஸிலுள்ள பிரித்தானிய இராணுவ, வானூர்தி தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானியா, தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) நகரை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் ஏவுகணைகளை மூலத்திலேயே அழிக்கும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தயார் என பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் தளம் மீதே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை சைப்ரஸில் உள்ள பிரித்தானிய வானூர்தி தளம் மீது ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் குறைந்த அளவிலான சேதம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.