ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ட்ரோன் ஊடுருவியதை அடுத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துத் தாக்கியதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் முயற்சியின் போது தூதரகத்தின் அருகாமையில் ஒரு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ட்ரோன் ஊடுருவியதை அடுத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துத் தாக்கியதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் முயற்சியின் போது தூதரகத்தின் அருகாமையில் ஒரு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுதாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.