தேசிய மக்கள் சக்தி அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் எனவும், நிலக்கரி ஊழல் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
"தேசிய மக்கள் சக்தி அரசு தேர்தலின் போது கூறிய பொய்களை அடிப்படையாகக் கொண்டே தற்போது ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவினால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், செலவும் அதிகரிக்கவுள்ளது.
முன்னர் அரிசி இறக்குமதியின் போது மோசடியில் ஈடுபட்டு 'கறுப்புப் பட்டியலில்' சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கே, இந்த அரசு நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த மோசடியால் நாட்டுக்கு 700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் இதனை மறுத்தாலும், அநுரகுமாரவின் ஆட்சியின் முகத்தில் இந்த ஊழல் கரியைப் பூசியிருக்கின்றது.
தங்களை இடதுசாரிகள் என சமூக வலைத்தளங்களில் கூறிக்கொள்பவர்கள் ஜே.வி.பி.யின் வரலாற்றை அறியாதவர்கள். இந்திய எதிர்ப்புக் கொள்கையிலேயே றோஹண விஜேவீர இந்த கட்சியை நிறுவினார். ஆனால் இன்று வேறு வழியின்றி அவர்கள் இந்தியாவின் காலடியில் சரணடைந்துள்ளனர். மக்களுக்குத் தேவை முறையான ஆட்சியே தவிர, இவ்வாறான கண்காட்சிகள் அல்ல.
எந்த ஆட்சி வந்தாலும் மலையக மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. 2015 - 2019 காலப்பகுதியே அந்த மக்களுக்குப் பொற்காலமாக அமைந்தது. ஜனாதிபதி அவர்கள் வெறும் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களின் கைகளைப் பார்ப்பதை விடுத்து, அவர்களின் வீட்டு மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
மலையக மக்களை வெறும் தொழிலாளர்களாக அன்றி, அவர்களைப் பங்காளிகளாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இது தொடர்பாக நாம் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். எமது ஆட்சி மலரும் போது அதனை நிச்சயமாக நிறைவேற்றுவோம்." - என்றார்.
நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் – என்.பி.பியைச் சாடும் மனோகணேசன் தேசிய மக்கள் சக்தி அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் எனவும், நிலக்கரி ஊழல் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-"தேசிய மக்கள் சக்தி அரசு தேர்தலின் போது கூறிய பொய்களை அடிப்படையாகக் கொண்டே தற்போது ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவினால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், செலவும் அதிகரிக்கவுள்ளது.முன்னர் அரிசி இறக்குமதியின் போது மோசடியில் ஈடுபட்டு 'கறுப்புப் பட்டியலில்' சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கே, இந்த அரசு நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த மோசடியால் நாட்டுக்கு 700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் இதனை மறுத்தாலும், அநுரகுமாரவின் ஆட்சியின் முகத்தில் இந்த ஊழல் கரியைப் பூசியிருக்கின்றது.தங்களை இடதுசாரிகள் என சமூக வலைத்தளங்களில் கூறிக்கொள்பவர்கள் ஜே.வி.பி.யின் வரலாற்றை அறியாதவர்கள். இந்திய எதிர்ப்புக் கொள்கையிலேயே றோஹண விஜேவீர இந்த கட்சியை நிறுவினார். ஆனால் இன்று வேறு வழியின்றி அவர்கள் இந்தியாவின் காலடியில் சரணடைந்துள்ளனர். மக்களுக்குத் தேவை முறையான ஆட்சியே தவிர, இவ்வாறான கண்காட்சிகள் அல்ல.எந்த ஆட்சி வந்தாலும் மலையக மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. 2015 - 2019 காலப்பகுதியே அந்த மக்களுக்குப் பொற்காலமாக அமைந்தது. ஜனாதிபதி அவர்கள் வெறும் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களின் கைகளைப் பார்ப்பதை விடுத்து, அவர்களின் வீட்டு மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.மலையக மக்களை வெறும் தொழிலாளர்களாக அன்றி, அவர்களைப் பங்காளிகளாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இது தொடர்பாக நாம் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். எமது ஆட்சி மலரும் போது அதனை நிச்சயமாக நிறைவேற்றுவோம்." - என்றார்.