• May 27 2026

பொலிஸ் பாதுகாப்பையும் மீறி தப்பிய இரட்டைக் கொலை சந்தேகநபர் - டிக்கோயாவில் பதற்றம்

Chithra / May 27th 2026, 10:40 am
image

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.


தப்பியோடியவர் 47 வயதுடைய செல்லையா மனோஜ்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (26) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 5.45 மணியளவில் வைத்தியசாலை வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 21ஆம் திகதி இரவு டிக்கோயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மூத்த தம்பதியினர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இவர், பொகவந்தலாவை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் ஏற்கனவே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


மேலும், பொலிஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பி மற்றும் கூர்மையான ஆயுதம் ஆகியனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவ, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட   சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பொலிஸ் பாதுகாப்பையும் மீறி தப்பிய இரட்டைக் கொலை சந்தேகநபர் - டிக்கோயாவில் பதற்றம் ஹட்டன் – டிக்கோயா பகுதியில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.தப்பியோடியவர் 47 வயதுடைய செல்லையா மனோஜ்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (26) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 5.45 மணியளவில் வைத்தியசாலை வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 21ஆம் திகதி இரவு டிக்கோயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மூத்த தம்பதியினர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இவர், பொகவந்தலாவை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் ஏற்கனவே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மேலும், பொலிஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பி மற்றும் கூர்மையான ஆயுதம் ஆகியனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவ, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட   சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement