• Sep 13 2025

கற்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு!

shanuja / Sep 12th 2025, 2:44 pm
image

கற்பிணித் தாய்மார்களுக்கான மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் திருகோணமலை -சேருநுவர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டது. 


பெரண்டினா நிறுவனத்தின் சேருநுவர கிளையினால் , லைப் லைன் வேலைத்திட்டத்தின் ஊடாக இதன்போது 98 கற்பணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினர் றுவான், சேருவில, மூதூர்,வெருகல் பகுதிகளைச் சேர்ந்த குடும்பநல உத்தியோகத்தர்கள்,பெரண்டினா நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர் திருச் செல்வம்,சேருநுவர கிளை முகாமையாளர் ருபேசன் ,பெரண்டினா நிறுவன கிளை உத்தியோகத்தர்கள்,பெரண்டினா அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை பெரண்டினா நிறுவனத்தின் இவ் உதவித் திட்டமான திருகோணமலை மாவட்டத்தில் 400 பயனாளிகளுக்கும் நாடளாவிய ரீதியில் 7413 பயனாளிகளுக்கும் சென்றடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கற்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு கற்பிணித் தாய்மார்களுக்கான மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் திருகோணமலை -சேருநுவர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டது. பெரண்டினா நிறுவனத்தின் சேருநுவர கிளையினால் , லைப் லைன் வேலைத்திட்டத்தின் ஊடாக இதன்போது 98 கற்பணித் தாய்மார்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினர் றுவான், சேருவில, மூதூர்,வெருகல் பகுதிகளைச் சேர்ந்த குடும்பநல உத்தியோகத்தர்கள்,பெரண்டினா நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர் திருச் செல்வம்,சேருநுவர கிளை முகாமையாளர் ருபேசன் ,பெரண்டினா நிறுவன கிளை உத்தியோகத்தர்கள்,பெரண்டினா அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை பெரண்டினா நிறுவனத்தின் இவ் உதவித் திட்டமான திருகோணமலை மாவட்டத்தில் 400 பயனாளிகளுக்கும் நாடளாவிய ரீதியில் 7413 பயனாளிகளுக்கும் சென்றடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement