மருத்துவமனை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணி நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இவ் விவகாரம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சகம் முன்பு ஒப்புக்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்த தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இன்று (02) காலை முதல் நாளை (03) காலை 8.00 மணி வரை பணி நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து நடத்தப்படும். ஆனால்,அன்றாட சிகிச்சை சேவைகள் பாதிப்படையும் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டமைப்பின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க, தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறியுள்ளார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் மருத்துவமனை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணி நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சகம் முன்பு ஒப்புக்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்த தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே இன்று (02) காலை முதல் நாளை (03) காலை 8.00 மணி வரை பணி நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து நடத்தப்படும். ஆனால்,அன்றாட சிகிச்சை சேவைகள் பாதிப்படையும் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில் அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டமைப்பின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க, தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறியுள்ளார்.