• Oct 05 2026

திருமணத்தில் பாடினால் கட்டணம் செலுத்த வேண்டுமா? — பரவிய தகவலுக்கு அரசு விளக்கம்

Chithra / Oct 5th 2026, 3:58 pm
image


திருமண நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்கோ இசைப்பதற்கோ கட்டணம் செலுத்த வேண்டும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஏனைய படைப்பாளர்களின் படைப்புகள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் போது வழங்கப்பட வேண்டிய உரிமத் தொகை தொடர்பான கலந்துரையாடல்களே தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


குறிப்பாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்படும் இசை நிகழ்ச்சிகளில் பிற படைப்பாளர்களின் பாடல்கள் பயன்படுத்தப்படும்போது அவர்களுக்கும் உரிய கொடுப்பனவு கிடைக்க வேண்டும் என்பதே கலந்துரையாடலின் நோக்கம்.


ஆனால் திருமணங்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்கோ இசைப்பதற்கோ தனியான கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். 

திருமணத்தில் பாடினால் கட்டணம் செலுத்த வேண்டுமா — பரவிய தகவலுக்கு அரசு விளக்கம் திருமண நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்கோ இசைப்பதற்கோ கட்டணம் செலுத்த வேண்டும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஏனைய படைப்பாளர்களின் படைப்புகள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் போது வழங்கப்பட வேண்டிய உரிமத் தொகை தொடர்பான கலந்துரையாடல்களே தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.குறிப்பாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்படும் இசை நிகழ்ச்சிகளில் பிற படைப்பாளர்களின் பாடல்கள் பயன்படுத்தப்படும்போது அவர்களுக்கும் உரிய கொடுப்பனவு கிடைக்க வேண்டும் என்பதே கலந்துரையாடலின் நோக்கம்.ஆனால் திருமணங்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்கோ இசைப்பதற்கோ தனியான கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement