இன்றைய தினம் காலை மலையக மறுசீரமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பின் (CCRM) பிரதிநிதிகள் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் மலையக சமூகங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக டித்வா புயலின் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இடம் பெற்ற நிகழ்வுகள் பற்றிய மலையகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் யுவதிகள் அரசாங்க சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் குறைபாடுகள்,முன்பள்ளி கல்வி தொடர்பான சிக்கல்கள் மற்றும் அத்தியாவசிய நிர்வாக சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் போன்றவை முக்கிய சவால்களை இதன்போது சுட்டி காட்டப்பட்டன.
இந்தச் சவால்களுக்கு தீர்வு காணவும், அனைத்து சமூகங்களினதும் நல்வாழ்வு மற்றும் வலு வூட்டலை உறுதி செய்வதற்காகவும், உள் வாங்குதலுடனும் அணுகக்கூடிய தன்மையுடையதுமான ஆதரவுக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தவும் அரசாங்கமும் தன்னுடைய அமைச்சும் தயாராக இருப்பதாக அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் சுமுகமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றது நல்ல தீர்வுகளை அமைச்சர் பெற்று தர முன் வந்து உள்ளார்.
மலையக பெண்கள்,சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை மலையக மறுசீரமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பின் (CCRM) பிரதிநிதிகள் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் மலையக சமூகங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக டித்வா புயலின் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இடம் பெற்ற நிகழ்வுகள் பற்றிய மலையகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் பற்றி கலந்துரையாடப்பட்டது.மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் யுவதிகள் அரசாங்க சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் குறைபாடுகள்,முன்பள்ளி கல்வி தொடர்பான சிக்கல்கள் மற்றும் அத்தியாவசிய நிர்வாக சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் போன்றவை முக்கிய சவால்களை இதன்போது சுட்டி காட்டப்பட்டன.இந்தச் சவால்களுக்கு தீர்வு காணவும், அனைத்து சமூகங்களினதும் நல்வாழ்வு மற்றும் வலு வூட்டலை உறுதி செய்வதற்காகவும், உள் வாங்குதலுடனும் அணுகக்கூடிய தன்மையுடையதுமான ஆதரவுக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தவும் அரசாங்கமும் தன்னுடைய அமைச்சும் தயாராக இருப்பதாக அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் சுமுகமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றது நல்ல தீர்வுகளை அமைச்சர் பெற்று தர முன் வந்து உள்ளார்.