• Apr 15 2026

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

Chithra / Feb 24th 2026, 8:49 pm
image


வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று சந்தேகநபர்களை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று மாலை கைது செய்துள்ளது.


வர்த்தக அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீண்டகாலமாக இரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்தே இவர்களுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் அந்த அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என்று ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று சந்தேகநபர்களை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று மாலை கைது செய்துள்ளது.வர்த்தக அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீண்டகாலமாக இரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்தே இவர்களுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் அந்த அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என்று ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement