கல்லாறு கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லாறு கிராமத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றது. கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து அப்பகுதியில் வாழும் மக்களை வேறு நிரந்தர தொழில்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து முற்றாக விடுபடல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையிடப்பட்டன. கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவத்தினர், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமசேவையாளர்,
பாடசாலை முதல்வர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.