அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால், இலங்கை அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைபு தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத சட்டத்தினை நீக்குக, புதிய அரசைப் பயங்கர வாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்ட வரைபை மீளப் பெறுக எனும் மனுவில் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் கையொப்பம் இட்டனர்.
மேலும் புதிய சட்டத்தின் மூலம் பொதுமக்கள் முகம் கொடுக்க உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் பழைய சட்டத்தில் இருந்து புதிய சட்டம் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் விளக்கப்படுத்தினார்.
மேலும் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்திலிருந்து எவ்வாறு பொது மக்களை பாதுகாப்பது குறித்து சட்டத்தரணியால் விளக்கம் கொடுக்கப்பட்டது.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைபு தொடர்பில் கலந்துரையாடல் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால், இலங்கை அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைபு தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.பயங்கரவாத சட்டத்தினை நீக்குக, புதிய அரசைப் பயங்கர வாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்ட வரைபை மீளப் பெறுக எனும் மனுவில் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் கையொப்பம் இட்டனர்.மேலும் புதிய சட்டத்தின் மூலம் பொதுமக்கள் முகம் கொடுக்க உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் பழைய சட்டத்தில் இருந்து புதிய சட்டம் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் விளக்கப்படுத்தினார்.மேலும் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்திலிருந்து எவ்வாறு பொது மக்களை பாதுகாப்பது குறித்து சட்டத்தரணியால் விளக்கம் கொடுக்கப்பட்டது.