இலங்கை ரயில் திணைக்களத்தின் பயணச்சீட்டு வழங்கும் முறையை நவீனப்படுத்தும் நோக்கில் புதிய “ஸ்மார்ட் ரயில் சேவை” அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள கையால் வழங்கப்படும் பயணச்சீட்டு முறைக்கு மாற்றாக, ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வழங்குவதும், அவற்றை சரிபார்க்கும் நவீன உபகரணங்களையும் அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முன்னோடி திட்டமாக களனி, நாரஹேன்பிட்ட, நுகேகொடை, மக்கும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய ரயில் நிலையங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆரம்ப கட்டத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை கண்டறியும் நோக்கில், சில நிலையங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பின்னர், இதனை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் தொடர்பான ஆயத்தப்பணிகள் மற்றும் செயல்திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நேற்று (27) நாரஹேன்பிட்ட ரயில் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டால், பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்படும் நீண்ட வரிசைகள் மற்றும் நெரிசல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் - ஏப்ரலில் ‘ஸ்மார்ட்’ சேவை அறிமுகம் இலங்கை ரயில் திணைக்களத்தின் பயணச்சீட்டு வழங்கும் முறையை நவீனப்படுத்தும் நோக்கில் புதிய “ஸ்மார்ட் ரயில் சேவை” அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்தத் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள கையால் வழங்கப்படும் பயணச்சீட்டு முறைக்கு மாற்றாக, ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வழங்குவதும், அவற்றை சரிபார்க்கும் நவீன உபகரணங்களையும் அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.முன்னோடி திட்டமாக களனி, நாரஹேன்பிட்ட, நுகேகொடை, மக்கும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய ரயில் நிலையங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.ஆரம்ப கட்டத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை கண்டறியும் நோக்கில், சில நிலையங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பின்னர், இதனை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டம் தொடர்பான ஆயத்தப்பணிகள் மற்றும் செயல்திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நேற்று (27) நாரஹேன்பிட்ட ரயில் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டால், பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்படும் நீண்ட வரிசைகள் மற்றும் நெரிசல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.