முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சமித்ரி ரம்புக்வெல்ல கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சமித்ரி ரம்புக்வெல்ல கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.