அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், விலை 100 டொலர்களைத் தாண்டலாம் என வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், he Organization of the Petroleum Exporting Countries Plus (OPEC+) அமைப்பு கூடி, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 137,000 பீப்பாய்களுக்குப் பதிலாக, நாளொன்றுக்கு 411,000 பீப்பாய்கள் அல்லது அதற்கும் மேலாக உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளன.
ஏனைய நாடுகளிடம் இதற்கான உபரித் திறன் இல்லாமை பெரும் சவாலாக இருந்தபோதிலும், நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
உலகின் தினசரி எண்ணெய் உற்பத்தி 100 மில்லியன் பீப்பாய்களாகக் காணப்படும் நிலையில், இதில் 20% மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உற்பத்திக்குத் தடை ஏற்படும் பட்சத்தில், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஈரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாகவும், தங்களது நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான ஈரானிய இலக்குகளையும் பட்டியலிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் 'ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன' என்று ,ரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஈரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை இலங்கைக்கு காத்திருக்கும் பேரிடி ஈரானின் பதிலடிகளால் கடும் பாதிப்பு அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், விலை 100 டொலர்களைத் தாண்டலாம் என வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், he Organization of the Petroleum Exporting Countries Plus (OPEC+) அமைப்பு கூடி, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 137,000 பீப்பாய்களுக்குப் பதிலாக, நாளொன்றுக்கு 411,000 பீப்பாய்கள் அல்லது அதற்கும் மேலாக உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளன. ஏனைய நாடுகளிடம் இதற்கான உபரித் திறன் இல்லாமை பெரும் சவாலாக இருந்தபோதிலும், நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார். உலகின் தினசரி எண்ணெய் உற்பத்தி 100 மில்லியன் பீப்பாய்களாகக் காணப்படும் நிலையில், இதில் 20% மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உற்பத்திக்குத் தடை ஏற்படும் பட்சத்தில், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் ஈரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாகவும், தங்களது நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.இதேவேளை ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான ஈரானிய இலக்குகளையும் பட்டியலிட்டுள்ளது.இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் 'ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன' என்று ,ரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஈரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.