• Apr 19 2026

டுபாயில் சிக்கியுள்ள பயணிகளுக்கு இலவச தங்குமிட வசதி!

shanu / Mar 2nd 2026, 11:30 am
image

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது.


ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


"பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனை மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என GCC நாடுகள் வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.


இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டுபாயில் சிக்கியுள்ள பயணிகளுக்கு இலவச தங்குமிட வசதி மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது.ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது."பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனை மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என GCC நாடுகள் வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement