• Oct 15 2026

வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை; மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்

Chithra / Oct 15th 2026, 3:19 pm
image


கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் இந்து ஆலயம் மற்றும் பௌத்த விகாரை ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.


அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த விகாரைக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த கரகத்தில் வைக்கப்பட்டிருந்த சில சூடாமணிகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விகாரையிலிருந்து திருடப்பட்ட சூடாமணிகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த இரு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் கலஹா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதற்கமைய, தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவ இடங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை; மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார் கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் இந்து ஆலயம் மற்றும் பௌத்த விகாரை ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விகாரைக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த கரகத்தில் வைக்கப்பட்டிருந்த சில சூடாமணிகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விகாரையிலிருந்து திருடப்பட்ட சூடாமணிகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த இரு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் கலஹா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதற்கமைய, தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவ இடங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement