• Oct 06 2026

நாமல் ராஜபக்ஷ, ஞானசார தேரர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chithra / Oct 6th 2026, 1:19 pm
image


கிரீஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 


விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


அதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


அத்துடன், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் (16ஆம் திகதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளைஇஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 


முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


நாமல் ராஜபக்ஷ, ஞானசார தேரர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு கிரீஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.அத்துடன், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் (16ஆம் திகதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளைஇஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement