• Apr 23 2026

நகைக்கடையில் கைவரிசை காட்டிய தம்பதிகள்; சிசிரிவில் மாட்டிய காணொளி வைரல்!

shanu / Oct 3rd 2025, 12:49 pm
image

நகைக்கடையொன்றில் கைவரிசை காட்டி நகை திருடிய தம்பதிகள் சிசிரிவி காட்சியில் மாட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. 


இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷாஹரில்  உள்ள நகைக் கடையில் இந்தத் திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. 



குறித்த நகைக்கடைக்கு வாடிக்கையாளர்களாக வேடமிட்டு, தம்பதியினர் சென்றுள்ளனர். அங்கு சென்ற உரிமையாளரிடம் நகை வாங்குவது போன்று ஒவ்வொரு நகைகளையும் பெண் எடுத்துப் பார்த்தார். 


பின்னர் மெது மெதுவாக நகையை கீழே எடுத்து சாறித் தலைப்பில் மறைத்து வைத்தார். எவ்வித பதற்றமுமின்றி அந்தப் பெண் நகையைத் திருடியுள்ளார். அதற்கு அவரது கணவனும் பக்கபலமாக இருந்துள்ளார். 


நகையைத் திருடிச் சென்றது கடையின் சிசிரிவியில் பதிவாகியதையடுத்து திருட்டுப் போனது தெரியவந்தது. 


அதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் குறித்த தம்பதியினர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


இலங்கைப் பெறுமதியில் சுமார் 20 லட்சம்  ரூபா மதிப்புள்ள நகையையே குறித்த தம்பதியினர் அலேக்காகத் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடையில் கைவரிசை காட்டிய தம்பதிகள்; சிசிரிவில் மாட்டிய காணொளி வைரல் நகைக்கடையொன்றில் கைவரிசை காட்டி நகை திருடிய தம்பதிகள் சிசிரிவி காட்சியில் மாட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷாஹரில்  உள்ள நகைக் கடையில் இந்தத் திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த நகைக்கடைக்கு வாடிக்கையாளர்களாக வேடமிட்டு, தம்பதியினர் சென்றுள்ளனர். அங்கு சென்ற உரிமையாளரிடம் நகை வாங்குவது போன்று ஒவ்வொரு நகைகளையும் பெண் எடுத்துப் பார்த்தார். பின்னர் மெது மெதுவாக நகையை கீழே எடுத்து சாறித் தலைப்பில் மறைத்து வைத்தார். எவ்வித பதற்றமுமின்றி அந்தப் பெண் நகையைத் திருடியுள்ளார். அதற்கு அவரது கணவனும் பக்கபலமாக இருந்துள்ளார். நகையைத் திருடிச் சென்றது கடையின் சிசிரிவியில் பதிவாகியதையடுத்து திருட்டுப் போனது தெரியவந்தது. அதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் குறித்த தம்பதியினர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இலங்கைப் பெறுமதியில் சுமார் 20 லட்சம்  ரூபா மதிப்புள்ள நகையையே குறித்த தம்பதியினர் அலேக்காகத் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement