டிக்கோயா நகரில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
கொலையை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயாவில் வீட்டிலிருந்த தம்பதிகள் படுகொலை - பதுங்கியிருத்தவரை இழுத்து வந்த மக்கள் டிக்கோயா நகரில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். கொலையை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர். இந்த நிலையில் சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.