• Dec 16 2025

விலங்குகளை கால்களால் நசுக்கி கொன்ற தம்பதி! மனதை உலுக்கும் சம்பவம்

Aathira / Nov 15th 2025, 12:40 pm
image

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கி, அவற்றை ஒரு செயலி மூலம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 'Goddess May Barefoot Premium Crush' எனும் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும், 

அதனை டார்க் வெப்பில் வெளியிடப்பட்டதாகவும், அதில் விலங்குகளை கொல்வதற்கான விலைப்பட்டியலும் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

 குறிப்பாக, ஒரு சிறிய எலியின் விலை 5 டொலர், மூன்று பூனைக் குட்டிகளின் விலை 180 டொலரும் என இருந்துள்ளது.

அத்துடன், வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

2024 மே முதல் ஒக்டோபர்  வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. 

சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 

இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். 

மேலதிக விசாரணைகள் முடிந்த பின், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி  அறிவிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விலங்குகளை கால்களால் நசுக்கி கொன்ற தம்பதி மனதை உலுக்கும் சம்பவம் கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கி, அவற்றை ஒரு செயலி மூலம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.மேலும், 'Goddess May Barefoot Premium Crush' எனும் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும், அதனை டார்க் வெப்பில் வெளியிடப்பட்டதாகவும், அதில் விலங்குகளை கொல்வதற்கான விலைப்பட்டியலும் இருந்ததாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக, ஒரு சிறிய எலியின் விலை 5 டொலர், மூன்று பூனைக் குட்டிகளின் விலை 180 டொலரும் என இருந்துள்ளது.அத்துடன், வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.இதை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2024 மே முதல் ஒக்டோபர்  வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். மேலதிக விசாரணைகள் முடிந்த பின், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி  அறிவிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement