• Jul 10 2025

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த நாடுகள் - இலங்கைக்கு 3 ஆவது இடம்!

shanuja / Jul 9th 2025, 9:44 am
image



2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 

 

எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 

அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் பட்டியலில் வியட்நாம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதனைத் தொடர்ந்தே இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.  

 

இலங்கையின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் சாகச அனுபவங்கள் உலகளாவிய பயணிகளை ஈர்ப்பதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த நாடுகள் - இலங்கைக்கு 3 ஆவது இடம் 2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் வியட்நாம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதனைத் தொடர்ந்தே இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.   இலங்கையின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் சாகச அனுபவங்கள் உலகளாவிய பயணிகளை ஈர்ப்பதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement