முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கும் நிலையில், வலி. வடக்கில் விடுவிக்கப்படாத மக்கள் காணிகளில் இராணுவத்தினர் பெரும் விமரிசையாக வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
வலி. வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளன.
அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள்விடுக்கப்படுகின்ற போதும், பல்வேறு காரணங்களைக் காட்டி இராணுவம் காணிகளை விடுவிக்காதுஇழுத்தடித்து வருகின்றது.
இந்நிலையில் அடாவடித்தனமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் தற்போது பெரும் எடுப்பில் வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
பலாலி வடக் கில் J/254 கிராம அலுவலர் பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளிலும், பலாலி வடமேற்கில் J/255 கிராம அலுவலர் பிரிவில் உள்ள காணிகளிலும் வெசாக் கூடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வெசாக் கொண்டாட்டங்கள் விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணிகளுக்கு அருகில் வலி. வடக்கு பிரதேசசபைக்குச் சொந்தமான பொதுச் சந்தை ஒன்றும் உள்ளது. அதையும் இராணுவத்தினர் தற்போது வரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
போரில் கொல்லப்பட்ட தங்களின் உறவு களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நேரத்தில், இராணு வத்தினரால் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தைத் குழப்பி, திசைதிருப்பும் வகை யிலேயே பௌத்த மக்கள் வாழாத- இன்னமும் படைக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களில் - இவ்வாறு பெருமெடுப்பில் இராணுவத்தால் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
முள்ளிவாய்க்கால் வாரத்தைக் குழப்ப வலி.வடக்கில் இராணுவ ஏற்பாடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கும் நிலையில், வலி. வடக்கில் விடுவிக்கப்படாத மக்கள் காணிகளில் இராணுவத்தினர் பெரும் விமரிசையாக வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.வலி. வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளன. அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள்விடுக்கப்படுகின்ற போதும், பல்வேறு காரணங்களைக் காட்டி இராணுவம் காணிகளை விடுவிக்காதுஇழுத்தடித்து வருகின்றது.இந்நிலையில் அடாவடித்தனமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் தற்போது பெரும் எடுப்பில் வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். பலாலி வடக் கில் J/254 கிராம அலுவலர் பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளிலும், பலாலி வடமேற்கில் J/255 கிராம அலுவலர் பிரிவில் உள்ள காணிகளிலும் வெசாக் கூடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வெசாக் கொண்டாட்டங்கள் விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளுக்கு அருகில் வலி. வடக்கு பிரதேசசபைக்குச் சொந்தமான பொதுச் சந்தை ஒன்றும் உள்ளது. அதையும் இராணுவத்தினர் தற்போது வரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.போரில் கொல்லப்பட்ட தங்களின் உறவு களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நேரத்தில், இராணு வத்தினரால் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தைத் குழப்பி, திசைதிருப்பும் வகை யிலேயே பௌத்த மக்கள் வாழாத- இன்னமும் படைக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களில் - இவ்வாறு பெருமெடுப்பில் இராணுவத்தால் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்