• May 15 2025

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு..!

Sharmi / May 14th 2025, 4:54 pm
image

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி நிதியத்திலிருந்து இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. 

குறித்த இழப்பீடு தொகை தற்போது உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு, அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த திஸ்ஸ மஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு. கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி நிதியத்திலிருந்து இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. குறித்த இழப்பீடு தொகை தற்போது உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு, அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த திஸ்ஸ மஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement