மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டு நினைவு கூரல் சத்துருக்கொண்டான் நினைவு தூபியடியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது.
1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இராணுவத்தினராலும், ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
நினைவேந்தலில் பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டோருக்கு மலர்மாலை தூவி அஞ்சலி செலுத்தினர்.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டு நினைவு கூரல் சத்துருக்கொண்டான் நினைவு தூபியடியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது.1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இராணுவத்தினராலும், ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. நினைவேந்தலில் பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டோருக்கு மலர்மாலை தூவி அஞ்சலி செலுத்தினர்.